/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கனமழையால் நிரம்பியது சிக்கராயபுரம் கல் குவாரி
/
கனமழையால் நிரம்பியது சிக்கராயபுரம் கல் குவாரி
ADDED : ஜூன் 23, 2024 01:37 AM

குன்றத்துார்:சென்னை அருகே குன்றத்துார் அடுத்த சிக்கராயபுரத்தில், 23 கல் குவாரிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 300 முதல் 400 அடி ஆழம் கொண்டவை.
கோடை காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இல்லாத நேரத்தில், இந்த கல் குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, சென்னைக்கு வழங்கப்படுகிறது.
இந்த 23 கல் குவாரிகளையும் ஒருங்கிணைத்து, நீர்த்தேக்கமாக மாற்ற அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கல் குவாரிகளில் ஏற்கனவே 80 சவீதற்கு மேல், நீர் நிரம்பி இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்யும் கன மழையால், 23 கல் குவாரிகளும் முழுதும் நிரம்பின.
இந்த கல் குவாரிகள் மூலம் 1 டி.எம்.சி.,தண்ணீர் கிடைக்கும். வறட்சி காலத்தில் குடிநீருக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.