ADDED : ஆக 03, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
பாரிமுனையில் காளிகாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெள்ளித்தேர் செய்யும் திருப்பணி நேற்று துவங்கியது.
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, 2.17 கோடி ரூபாய் மதிப்பில் மரத்தேரில் வெள்ளித்தகடு வேயும் பணிகளை துவக்கினார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
காளிகாம்பாள் கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்ய, 11 லட்சம் ரூபாயில் மரத்தேர் உருவாக்கப்பட்டு உள்ளது.
அதில், 277 கிலோ எடை உடைய வெள்ளித்தகடுகள் வேயும் பணி துவங்கப்பட்டு உள்ளது.
அடுத்த ஆறு மாதங்களுக்குள் இப்பணி முடிக்கப்பட்டு, வெள்ளித்தேர் வெள்ளோட்டம் விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.