/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியவருக்கு ஒரே நேரத்தில் இரு இதய வால்வு பொருத்தம்
/
முதியவருக்கு ஒரே நேரத்தில் இரு இதய வால்வு பொருத்தம்
முதியவருக்கு ஒரே நேரத்தில் இரு இதய வால்வு பொருத்தம்
முதியவருக்கு ஒரே நேரத்தில் இரு இதய வால்வு பொருத்தம்
ADDED : மே 28, 2024 12:12 AM
சென்னை, இணை நோய்களால் பாதிக்கப்பட்ட 71 வயது முதியவருக்கு, அதிநவீன நுட்பத்தில், அறுவை சிகிச்சையின்றி ஒரே நேரத்தில் இரு இதய வால்வுகளை பொருத்தி அப்பல்லோ டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, மருத்துவமனையின் முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் ரெபாய் சவுக்கத் அலி கூறியதாவது:
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுடன் உள்ள முதியவர் ஒருவர், இதய நல சிகிச்சை்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே, இருமுறை இதய வால்வுகள் செயற்கையாக மாற்றியமைக்கப்பட்டன.
ஒருமுறை திறந்தநிலை சிகிச்சையிலும், மற்றொரு முறை டி.ஏ.வி.ஐ., என்ற தொடையில் சிறு துளையிட்டும் செயற்கை வால்வுகள் பொருத்தப்பட்டன. இந்த சூழலில், மற்ற வால்வுகள் பாதிக்கப்பட்டதால், அவரது செயல் திறன் வெகுவாக குறைந்திருந்தது.
அறுவை சிகிச்சை வாயிலாக, மீண்டும் அவருக்கு வால்வு மாற்றுவது என்பது, மருத்துவ ரீதியாக ஏற்புடையதாக இல்லை. டி.ஆர்.ஐ.சி., என்ற நவீன சிகிச்சை வாயிலாக இருவேறு இதய வால்வுகளை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இடுப்புக்கு கீழ், நுண் துளையிட்டு ரத்த நாளங்கள் வழியாக செயற்கை வால்வுகள் பொருத்தப்பட்டன. தற்போது நலமுடன் உள்ளார். நான்கு செயற்கை வால்வுகள் ஒருவருக்கு பொருத்தப்பட்டிருப்பது நாட்டிலேயே இதுவே முதல் முறை.
இவ்வாறு அவர் கூறினார்.