/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீரகற்று நிலையத்தால் தோல் நோய் பாதிப்பு
/
கழிவுநீரகற்று நிலையத்தால் தோல் நோய் பாதிப்பு
ADDED : மே 28, 2024 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், 8வது தெருவில், கழிவுநீரகற்று நிலையம் உள்ளது. இங்கு, 6,000 வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த நிலையம் வழியாக வெளியேற்றப்படுகிறது.
இந்த இடத்தை ஒட்டி, 5,000 சதுர அடி காலி இடம் உள்ளது. இந்த இடத்தை பூங்கா அல்லது அடர்வனமாக மாற்ற வேண்டும். ஆனால், நிலையத்தில் மோட்டார் போடாத போது, காலி இடத்தில் கழிவுநீர் நிரம்பி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது.
காலி இடத்தை ஒட்டி குடியிருப்பு உள்ளதால், கொசு தொல்லை அதிகரித்து, தோல் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- த.கு.சோபன்பாபு, 30, பெரும்பாக்கம்