/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவியை வெட்டி கொன்ற ராணுவ வீரர் கைது
/
மனைவியை வெட்டி கொன்ற ராணுவ வீரர் கைது
ADDED : ஜூன் 05, 2024 12:26 AM

ஆர்.கே.பேட்டை,
ஆர்.கே.பேட்டை அடுத்த செல்லாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன், 38; ராணுவ வீரர். தற்போது, விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இவரது சகோதரியின் மகளான மோகனா, 28, என்பவரை திருமணம் செய்தார்.
கடந்த சில நாட்களாக, தம்பதி இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த விஜயன், மனைவி மோகனாவை கத்தியால் வெட்டிக் கொலை செய்தார்.
மோகனாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோகனாவின் சடலத்தை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விஜயனை கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். நேற்று மாலை வரை மது மயக்கத்தில் இருந்த விஜயனால், போலீசாரின் விசாரணைக்கு சரியான ஒத்துழைப்பு அளிக்க முடியவில்லை.