/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மது குடிக்க பணம் கேட்டு தாயை தாக்கிய மகன் கைது
/
மது குடிக்க பணம் கேட்டு தாயை தாக்கிய மகன் கைது
ADDED : மார் 01, 2025 01:15 AM

சென்னை, ராயப்பேட்டை, ஜெ.ஜெ.கான் சாலையைச் சேர்ந்தவர் யோவான், 25. ஜாம்பஜார் காவல் நிலைய பழைய குற்றவாளியான இவர், சமீபத்தில் தான் குற்ற வழக்கில் கைதாகி, சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.
வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த யோவான், தினசரி அவரது தாய் திலகத்திடம், மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் மது குடிக்க பணம் கேட்டு, தாயிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தன்னிடம் பணம் இல்லை என, தாய் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த யோவான், தாய் என்றும் பாராமல் அடித்து உதைத்ததுடன், சொம்பால் தாக்கி தலையில் பலத்த காயம் ஏற்படுத்தி தப்பினார்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஜாம்பஜார் போலீசார், யோவானை நேற்று கைது செய்தனர்.