/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபர் வெட்டியதில் மகன் பலி, தந்தை படுகாயம்
/
வாலிபர் வெட்டியதில் மகன் பலி, தந்தை படுகாயம்
ADDED : மார் 07, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த, சென்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன், 70. இவரது மகன் ரவி, 45; மாட்டு வியாபாரிகள்.
இவருக்கும், இவரது உறவினரான காமேஷ் என்பவருக்கும், நேற்று இரவு தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த காமேஷ், கத்தியால் நரசிம்மன், ரவியை சரமாரியாக வெட்டி தப்பினார்.
இதில், படுகாயம் அடைந்த ரவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நரசிம்மனை மீட்ட அக்கம்பக்கத்தினர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.
அங்கு அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ரவி உடலை கைப்பற்றிய செங்கல்பட்டு தாலுகா போலீசார், காமேஷை தேடுகின்றனர்.