/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தென்மண்டல வாலிபால் எஸ்.ஆர்.எம்., சாம்பியன்
/
தென்மண்டல வாலிபால் எஸ்.ஆர்.எம்., சாம்பியன்
ADDED : மே 26, 2024 12:17 AM

சென்னை, தமிழ் அன்னை வாலிபால் கிளப் சார்பில், தென் மண்டல வாலிபால் போட்டி, தஞ்சாவூரில் கடந்த 22ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதில், தென் மண்டல அளவில் தமிழக உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து அணிகள் பங்கேற்றன. 'லீக்' சுற்றில் சென்னை எஸ்.ஆர்.எம்., அணி, 25 - 16, 25 - 23 என்ற கணக்கில் தமிழ் அன்னை கிளப் அணியையும், மற்றொரு போட்டியில், கற்பகம் பொறியியல் கல்லுாரி அணியையும் 25 - 18, 25 - 20 என்ற கணக்கில் வீழ்த்தியது.
அரையிறுதியில், எஸ்.ஆர்.எம்., அணி, 25 - 22, 25 ---------- 20, 25 - 15, 25 - 22 என்ற கணக்கில், கோழிக்கோடு பல்கலையை தோற்கடித்தது. தொடர்ந்து விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், எஸ்.ஆர்.எம்., மற்றும் தமிழ் அன்னை கிளப் அணிகள் எதிர்கொண்டன. இதில், 25 - 18, 25 - 17, 23 - 25, 25 - 22 என்ற கணக்கில், எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்று 'சாம்பியன்' பட்டத்தை தட்டிச் சென்றது.