ADDED : ஜூன் 18, 2026 08:22 PM
சென்னை, ஜூன் 19–
டி.ஏ.வி., சிவில் சர்வீசஸ் அகாடமி, ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீசஸ் முதல்நிலை மற்றும் பிரதான தேர்வுக்கு தயாராகும் வகையில், மாணவர்கள் 10 மாத காலம் தங்கி படிக்கும் சிறப்புப் பயிற்சி திட்டத்தை தொடங்கி உள்ளது.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ‘எஸ்.எம்.கே.போம்ரா’ கல்வி நிறுவனங்கள், புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள, ‘வேதிக் வித்யா கேந்திரா’ ஆகிய இரு வளாகங்களில், உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புடன், இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இப்பயிற்சித் திட்டத்தில் சேர விரும்பும் தேர்வர்களுக்கு, வரும் 28ம் தேதி, நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு, https://civilservices.davchennai.org என்ற இணையதளத்தில் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்.
சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு, 72006 64649 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
***
