/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கெட்டுப்போன ஆட்டுக்கால் இறைச்சி சைதாப்பேட்டை கிடங்கில் பறிமுதல்
/
கெட்டுப்போன ஆட்டுக்கால் இறைச்சி சைதாப்பேட்டை கிடங்கில் பறிமுதல்
கெட்டுப்போன ஆட்டுக்கால் இறைச்சி சைதாப்பேட்டை கிடங்கில் பறிமுதல்
கெட்டுப்போன ஆட்டுக்கால் இறைச்சி சைதாப்பேட்டை கிடங்கில் பறிமுதல்
ADDED : செப் 03, 2024 12:42 AM

சென்னை,
அசைவ உணவு கடைகளுக்கு விற்பனைக்காக வைத்திருந்த ஆட்டுக்கால்களில், மனிதர்களை பாதிக்கும் 'ஈக்கோலை, மோல்டிங்' உள்ளிட்ட பாக்டீரியா தொற்று இருந்ததால், அவற்றை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை சைதாப்பேட்டையில், ஒரு குடோனில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி மற்றும் ஆட்டுக்கால்கள் இருப்பு வைக்கப்பட்டு, ஹோட்டல்களுக்கு வினியோகம் செய்வதாக, உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, சென்னை உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு பழுதடைந்த குளிர்சாதன பெட்டியில் 700 கிலோ ஆட்டுக்கால் இறைச்சி வைக்கப்பட்டிருந்தன. இவை கெட்டுப்போன நிலையில் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
அந்த ஆட்டுக்கால்கள், சாக்குப் பைகளில் பூசனம் படிந்த நிலையில் இருந்ததால், அதன் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஒரு மாதத்திற்கு முந்தைய ஆட்டுக்கால்கள் என்பது தெரிய வந்தது. இதனால், ஆட்டுக்கால்கள் வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு நேற்று 'சீல்' வைக்கப்பட்டது.
இதுகுறித்து, நியமன அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது:
சென்னை எழும்பூரில சில நாட்களுக்கு முன், 1,700 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த இறைச்சி எங்கெல்லாம் வினியோகிக்கப்பட்டு வருகிறது என்பதை விசாரணை நடத்தியதில், சைதாப்பேட்டையில் கெட்டுப்போன ஆட்டுகால்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
ஆட்டுக்கால் விற்பனையில், முறையான ரசீதுகள் எதுவும் இல்லாததால், எங்கிருந்து வாங்கப்பட்டது; யாருக்கு விற்பனை செய்யப்பட்டது போன்ற விபரம் தெரியவில்லை.வெளிமாநிலங்களில் இருந்து வரும் இதுபோன்ற இறைச்சி, சென்னையில் உள்ள ஹோட்டல்கள் வாங்காமல் இருந்ததால் தேங்கியுள்ளன.
அதேநேரம், மற்ற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு விற்பனை நடந்து வருகிறது.
குளிர்சாதன பெட்டிகள் முறையாக பராமரிப்பு இல்லாமல் உடைந்து உள்ளது. ஆனால், பழுதான குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்தால், எளிதில் கெட்டு விட்டது.
இந்த குடோனில் இருந்து எந்தெந்த கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது போன்ற விபரங்களை சேகரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.