/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துணை மின் நிலையத்தில் திடீர் தீ 8 மணி நேரம் போராடி அணைப்பு
/
துணை மின் நிலையத்தில் திடீர் தீ 8 மணி நேரம் போராடி அணைப்பு
துணை மின் நிலையத்தில் திடீர் தீ 8 மணி நேரம் போராடி அணைப்பு
துணை மின் நிலையத்தில் திடீர் தீ 8 மணி நேரம் போராடி அணைப்பு
ADDED : மே 26, 2024 12:15 AM

ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த வாணியஞ்சத்திரம் கிராமத்தில் உள்ளது துணை மின் நிலையம்.
இங்கிருந்து மணலி, திருவேற்காடு, கோயம்பேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று காலை, 7:00 மணிக்கு துணை மின் நிலையத்தில்உள்ள ஒரு மின்மாற்றி திடீரென தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்த செங்குன்றம், மாதவரம், மணலி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
காலை 8:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், துணை மின் நிலையத்தில் இருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
இந்த தீயில் லட்சக்கணக்கான ரூபாய் மின்மாற்றி, மின்கம்பிகள் எரிந்து நாசமாயின. உயிர் சேதம் ஏற்படவில்லை.