/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளையாட்டு செய்தி - மாநில ஜூனியர் தடகளம் துவக்கம் 3,200 வீரர் - வீராங்கனையர் உற்சாகம்

ADDED : ஜூலை 06, 2024 12:33 AM

சென்னை,தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 36வது மாநில ஜூனியர் ஓபன் தடகளப் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை பெரியமேடில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில், நேற்று காலை துவங்கியது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட மாநிலம் ழுழுதும் இருந்து, 3,200 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.
போட்டியில், பல்வேறு வயதினருக்கு ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு மற்றும் ஈட்டி எறிதல் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட வகையான போட்டிகள் நடக்கின்றன.
தொடர்ந்து, நேற்று மாலை, 2,500 வீரர் - வீராங்கனையர் ஒன்றிணைந்து, விளையாட்டு போட்டிகளில், ஊக்க மருந்துக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.
இந்நிகழ்வு, உலக சாதனை புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டது. போட்டிகள், நாளை வரை தொடர்ந்து நடக்கின்றன.