/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சென்னை கால்பந்து லீக்' மாம்பலம் அரசு பள்ளி வெற்றி
/
'சென்னை கால்பந்து லீக்' மாம்பலம் அரசு பள்ளி வெற்றி
'சென்னை கால்பந்து லீக்' மாம்பலம் அரசு பள்ளி வெற்றி
'சென்னை கால்பந்து லீக்' மாம்பலம் அரசு பள்ளி வெற்றி
ADDED : செப் 11, 2024 12:20 AM

சென்னை, சென்னை கால்பந்து லீக் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில், மாம்பலம் அரசு பள்ளி அணி, வியாசர்பாடி அரசு பள்ளி அணியை தோற்கடித்தது.
'லேட்டெண்ட் வியு அனலைடிக்ஸ்' எனும் தனியார் நிறுவனர் சார்பில், சி.கே.எல்., எனும் சென்னை கால்பந்து லீக்- சீசன் - 4 போட்டி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.,யின் நேரு பார்க் மைதானத்தில் நடக்கிறது.
இத்தொடரில், 14 வயதிற்கு உட்பட்ட அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலிருந்து மொத்தம், 36 பள்ளி அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று நடந்த சிறுவர்களுக்கான ஆட்டத்தில் பெரம்பூர் பந்தர் கார்டன் சென்னை அரசு பள்ளி மற்றும் அண்ணா சாலை மதர்ஷா பள்ளி அணிகள் மோதின.
அதில் , 1 - 0 என்ற கோல் கணக்கில், பெரம்பூர் பந்தர் கார்டன் அரசு பள்ளி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், மேற்கு மாம்பலம் அரசு பள்ளி அணி, 1 - 0 என்ற கோல் கணக்கில், வியாசர்பாடி கல்யாணபுரம் சென்னை அரசு பள்ளியை வீழ்த்தியது.
சிறுமியருக்கான போட்டியில், வியாசர்பாடி கல்யாணபுரம் சென்னை பள்ளி மற்றும் பெருங்குடி அரசு பள்ளிகளுக்கு இடையிலான ஆட்டம் கோல் எதுவுமின்றி 'டிரா'வில் முடிந்தது. போட்டிகள் தொடர்ந்து, 15ம் தேதி வரை நடக்கின்றன.