/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில ஹாக்கி 'லீக்' பைனலுக்கு புதுகை, திருவண்ணாமலை தகுதி
/
மாநில ஹாக்கி 'லீக்' பைனலுக்கு புதுகை, திருவண்ணாமலை தகுதி
மாநில ஹாக்கி 'லீக்' பைனலுக்கு புதுகை, திருவண்ணாமலை தகுதி
மாநில ஹாக்கி 'லீக்' பைனலுக்கு புதுகை, திருவண்ணாமலை தகுதி
ADDED : மார் 06, 2025 11:50 PM

சென்னை, மார்ச் 7-
'அஸ்மிதா' மாநில சப் - ஜூனியர் ஹாக்கி போட்டியில், புதுக்கோட்டை - திருவண்ணாமலை அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
'கேலோ இந்தியா' மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு இணைந்து, 'அஸ்மிதா' என்ற தலைப்பில், மகளிர் சப் ஜூனியருக்கான மாநில ஹாக்கி, 'லீக்' போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கின்றன.
போட்டியில், புதுக்கேட்டை, வேலுார், கோவை, சிவகங்கை, ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், துாத்துக்குடி ஆகிய எட்டு மாவட்ட அணிகள் பங்கேற்றன. எட்டு அணிகளும், 'ஏ, பி' என்று இரு குரூப்பாக பிரிந்து, 'லீக்' முறையில் மோதுகின்றன.
நேற்று காலை நடந்த முதல் அரையிறுதியில், புதுக்கோட்டை மற்றும் ஈரோடு அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான ஆட்டத்தில், முதல் பாதியில், ஈரோடு வீராங்கனை சிபானி, 11வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால், முதல் பாதி நேர முடிவில், 1 - 0 என்ற கணக்கில் ஈரோடு முன்னிலையில் இருந்தன.
இரண்டாவது பாதியில், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய புதுக்கோட்டை வீராங்கனை கோபிகா, 40, 48வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்து, அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனால், 2 - 1 என்ற கணக்கில் புதுக்கோட்டை அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில், திருவண்ணாமலை அணி, 1 - 0 என்ற கணக்கில், வேலுார் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது. அணியின் வீராங்கனை ஜோவினா டெப்னி, 26வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து வெற்றிக்கு உதவினார். போட்டிகள் தொடர்கின்றன.