/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிகள் பால்பேட்மின்டன் 14 அணிகள் பலப்பரீட்சை
/
பள்ளிகள் பால்பேட்மின்டன் 14 அணிகள் பலப்பரீட்சை
ADDED : செப் 08, 2024 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, செப். 8-
எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி சார்பில், கல்லுாரியின் 26வது நிறுவன தினத்தை முன்னிட்டு, பள்ளிகளுக்கு இடையிலான பால்பேட்மின்டன் போட்டி, நேற்று துவங்கியது.
போட்டிகள், செங்கல்பட்டு, காட்டாங்கொளத்துாரில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடக்கின்றன.
இதில், சோழிங்கநல்லுார், மாமல்லபுரம், கத்திவாக்கம் அரசு பள்ளிகள் உட்பட மொத்தம், 14 அணிகள் பங்கேற்றுள்ளன.
அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 'நாக் அவுட்' முறையில் மோதி வருகின்றன. நான்கு பிரிவுகளிலும் தேர்வாகும் தலா ஒரு அணிகள், சூப்பர் லீக் சுற்றில் பங்கேற்கும்.