/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில யூத் தடகளம் வரும்18ல் துவக்கம்
/
மாநில யூத் தடகளம் வரும்18ல் துவக்கம்
ADDED : மே 15, 2024 10:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், மாநில அளவிலான 5வது யூத் தடகள போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுாரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலையில் துவங்க உள்ளது.
போட்டிகள், நாளை மறுநாள் 18ம் தேதி மற்றும் 19ம் தேதி நடக்கின்றன. போட்டியில், ஓட்டம், நீளம் தாண்டுதல் உட்பட, ஆண்களுக்கு 59 வகையான போட்டிகளும், பெண்களுக்கு, 57 வகையான போட்டிகளும் நடக்கின்றன.
இதில், 18, 20, 23 வயதுக்கு உட்பட்ட 1,200 பேர் பங்கேற்கின்றனர். இப்போட்டியில் தேர்வாகுவோர், தெலுங்கானாவில் ஜூன் 15ல் துவங்கும், 19வது தேசிய யூத் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர் என, மாநில தடகள சங்க செயலர் லதா தெரிவித்தார்.