/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் முதல்முறை ஸ்ரீ பத்ராசல ராமர் தரிசனம்
/
சென்னையில் முதல்முறை ஸ்ரீ பத்ராசல ராமர் தரிசனம்
ADDED : மே 30, 2024 12:14 AM
சென்னை, பக்த பாத சேவா டிரஸ்ட், சென்னையில் முதல் முறையாக, ஸ்ரீ பத்ராசல ராமர் தரிசன மூன்று நாள் நிகழ்வை, ஜூன் 28ம் தேதி முதல் மூன்று நாட்கள், சென்னை, தி.நகரில் உள்ள கிருஷ்ண சுவாமி திருமண மண்டபத்தில் நடத்துகிறது.
முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்நிகழ்வில் ஸ்ரீ பத்ராசல ராமர், 20 அடி உயர அனுமார் தரிசனம் தர உள்ளார். மேலும், 1,008 புடவையால் சீதாதேவிக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது.
குத்துவிளக்கு பூஜை, புத்திரகாமேஷ்டி யாகம், சீதா கல்யாணம், ராமர் பட்டாபிஷேகம் நடக்க உள்ளது.
குத்துவிளக்கு பூஜை, புடவை அர்ச்சனை, புத்திரகாமேஷ்டி யாகத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், 'கூகுள் பிளே ஸ்டோர்' வாயிலாக, ALANKARA KRIYA என்ற பக்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.