sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'நோட்டா'வில் ஸ்ரீபெரும்புதுார் சாதனை

/

'நோட்டா'வில் ஸ்ரீபெரும்புதுார் சாதனை

'நோட்டா'வில் ஸ்ரீபெரும்புதுார் சாதனை

'நோட்டா'வில் ஸ்ரீபெரும்புதுார் சாதனை


ADDED : ஜூன் 06, 2024 12:20 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., - டி.ஆர்.பாலு, அ.தி.மு.க., - பிரேம்குமார், த.மா.கா., - வேணுகோபால், நாம் தமிழர் - ரவிசந்திரன் உள்ளிட்ட, 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஓட்டு எண்ணிக்கையின் போது, ஆரம்பம் முதலே, தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, தொடர்ந்து முன்னிலை வகித்தார். ஒவ்வொரு சுற்றிலும், அவரின் ஓட்டுகள் வித்தியாசம் அதிகரித்துக்கொண்டே சென்றது.

அதேநேரத்தில், முக்கிய வேட்பாளர்களுக்கு போட்டியாக, கடைசி இடத்தில் இருந்த நோட்டாவும் போட்டி போட்டுக்கொண்டு ஓட்டுகளை வாங்கியது.

சட்டசபை தொகுதிகள் வாரியாக, 3,000, 4,000, 5,000 என்ற அடிப்படையில் ஓட்டு வாங்கிய நோட்டா, இறுதியாக, 26,465 ஓட்டுகள் பெற்று, ஐந்தாவது இடம் பிடித்து, புதிய சாதனையை பிடித்துள்ளது.

தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, 7,58,611 ஓட்டுகள் பெற்று வெற்றிப் பெற்றார். பதிவான மொத்த ஓட்டுகளில், ஆறில் ஒரு பங்கு ஓட்டுகளை பெற்றிருக்க வேண்டும். அப்போது தான், அவர்களது 'டிபாசிட்' தொகை திரும்ப வழங்கப்படும்.

ஸ்ரீபெரும்புதுார் தொகுதியை பொறுத்தவரை, 14,35,243 ஓட்டுகள் பதிவானது. போட்டியிட்ட, 31 பேரில், தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார் ஆகிய இருவர் மட்டுமே, 2 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றனர்.

த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரவிசந்திரன் உட்பட 29 பேர் 'டிபாசிட்' இழந்தனர்.

அதேசமயம், 2019ல் டி.ஆர்.பாலு 5,07,955 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில், 4,87,029 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். கடந்தமுறையை ஒப்பிடுகையில் அவருக்கு 34,670 ஓட்டுகள் குறைந்துள்ளது.

அதேபோல், தென்சென்னையில் 41 பேர் போட்டியிட்டனர். 5,16,628 ஓட்டுகள் பெற்று, தி.மு.க.,வின் தமிழச்சி தங்கப்பாண்டியன் வெற்றி பெற்றார்.

பா.ஜ.,வின் தமிழிசையை 2,90,683 ஓட்டுக்கள் பெற்ற இரண்டாம் இடமும், அ.தி.மு.க.,வின் ஜெயவர்த்தன், 1,72,491 ஓட்டுக்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி, 83,972 ஓட்டுகள் பெற்று நான்காம் இடம் பெற்றார்.

மற்ற உதிரிக் கட்சியினர், சுயேச்சைகளை பின்னுக்கு தள்ளி 'நோட்டா' - 15,607 ஓட்டுக்கள் பெற்று ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us