/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.ஆர்.எம்., கல்லுாரி விழா வணிகவியல் துறை அசத்தல்
/
எஸ்.ஆர்.எம்., கல்லுாரி விழா வணிகவியல் துறை அசத்தல்
எஸ்.ஆர்.எம்., கல்லுாரி விழா வணிகவியல் துறை அசத்தல்
எஸ்.ஆர்.எம்., கல்லுாரி விழா வணிகவியல் துறை அசத்தல்
ADDED : மார் 28, 2024 12:14 AM

சென்னை, வடபழனி எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில் நடந்த விளையாட்டு விழாவில், வணிகவியல் துறை அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில், ஆண்டு விளையாட்டு விழா, சமீபத்தில் வடபழனி வளாகத்தில் நடந்தது. இதில், டேபிள் டென்னிஸ், கேரம், செஸ், யோகா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில், அனைத்து துறை மாணவ - மாணவியர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட வணிகவியல் துறையினர் 'சாம்பியன்' கோப்பையை கைப்பற்றினர்.
பரிசளிப்பு விழாவில், மானுடவியல் புலத்தலைவர் ஆனந்த் பத்மநாபன், உடற்கல்வி இயக்குனர் மோகன கிருஷ்ணன் பரிசுகள் வழங்கினர்.