/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேட்மின்டனில் எஸ்.ஆர்.எம்., - சாய்ராம் அபாரம்
/
பேட்மின்டனில் எஸ்.ஆர்.எம்., - சாய்ராம் அபாரம்
ADDED : செப் 12, 2024 12:05 AM

சென்னை, அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள், பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், நான்காவது மண்டலத்தில் ஆண்களுக்கான பேட்மின்டன் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை பொறியியல் கல்லுாரியில் நேற்று துவங்கியது. இதில், 10 பொறியியல் கல்லுாரி அணிகள் மோதி வருகின்றன.
காலை நடந்த முதல் போட்டியில், எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி அணி, 3 - 0 புள்ளி கணக்கில், தனலட்சுமி பொறியியல் கல்லுாரியை வீழத்தியது.
இரண்டாவது போட்டியில், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுாரி அணி, 3 - 0 புள்ளி கணக்கில், நியூ பிரின்ஸ் பவானி பொறியியல் கல்லுாரியை தோற்கடித்தது.
மூன்றாவது போட்டியில், தாகூர் பொறியியல் கல்லுாரி அணி, 3 - 0 புள்ளி கணக்கில் பிரின்ஸ் வாசுதேவன் பொறியியல் கல்லுாரி அணியை வென்றது.
நான்காவது போட்டியில் பெரி தொழில்நுட்பக் கல்லுாரி 3 - 0 புள்ளி கணக்கில் பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி அணியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.