/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்டேடியம் கூரை பூச்சு விழுந்து பெண் காயம்
/
ஸ்டேடியம் கூரை பூச்சு விழுந்து பெண் காயம்
ADDED : ஆக 02, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், பெரியமேடு நேரு விளையாட்டரங்கத்தில் நேற்று நடந்தன.
போட்டிகளை, பார்வையாளர் மாடத்தின் இருக்கைகளில் அமர்ந்து, பெற்றோரும், ஆசிரியர்களும் பார்வையிட்டனர்.
இந்நிலையில், 'எச்' ஸ்டாண்ட் பகுதியின் கூரையிலிருந்து காரைப்பூச்சு பெயர்ந்து, பெண் ஒருவரின் தலையில் விழுந்தது. இதனால், தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இதையடுத்து, அங்கு வந்த, விளையாட்டரங்க ஊழியர்கள், அப்பெண்ணிற்கு முதலுதவி செய்தனர். பின், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.