/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி சென்னை எஸ்.டி.ஏ.டி., 'சாம்பியன்'
/
மாநில ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி சென்னை எஸ்.டி.ஏ.டி., 'சாம்பியன்'
மாநில ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி சென்னை எஸ்.டி.ஏ.டி., 'சாம்பியன்'
மாநில ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி சென்னை எஸ்.டி.ஏ.டி., 'சாம்பியன்'
ADDED : செப் 04, 2024 12:59 AM

சென்னை:சென்னை மாவட்ட ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் சார்பில், 16ம் ஆண்டு மாநில அளவிலான தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் - 2024 போட்டி, வேளச்சேரியில் நீச்சல் குள வளாகத்தில் நடந்தது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். 12, 14, 17 வயதுக்குட்பட்ட மூன்று பிரிவுகளில் நடந்தன.
இரண்டு நாட்கள் நடந்த போட்டிகளின் முடிவில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், சென்னை எஸ்.டி.ஏ.டி., அணி மொத்தம், 20 தங்கம், 10 வெள்ளி, ஏழு வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
தர்மபுரி மாவட்ட அணி, 10 தங்கம், ஏழு வெள்ளி, மூன்று வெண்கலம் வென்று, இரண்டாவது இடமும், தஞ்சாவூர் அணி ஐந்து தங்கம், 10 வெள்ளி, இரண்டு வெண்கலம்வென்று, மூன்றாவதுஇடத்தையும் பிடித்தன.