ADDED : ஜூன் 15, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
சென்னை: கே.கே.நகரில் உள்ள, ‘ஸ்பிரிங் பீல்ட்’ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர் தலைவர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது.
விழாவில், போலீஸ் எஸ்.ஐ., பிரகாஷ் பங்கேற்று, புதிதாக மாணவ தலைவராக பதவியேற்ற ஸ்ருதி, துணைத்தலைவர் குருபிரசாத், விளையாட்டு தலைவர் பூபேஷ் ஷர்மா மற்றும் நேரு, நேதாஜி, படேல் மற்றும் திலகர் இல்ல பொறுப்பாளர்களுக்கு, அடையாளப் பதக்கங்களை அணிவித்து, பதவி பிரமானம் செய்து வைத்தார்.
பின், எஸ்.ஐ., பிரகாஷ் பேசுகையில், ‘‘மாணவர்களுக்கு, ஒழுக்கம், நேர்மை, தலைமைத்துவம், சமூகப்பொறுப்புடன் சமூகத்துக்குப் பங்களிக்க வேண்டும். அதற்கு, மாணவத் தலைவர்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும்,’’ என்றார்.
நிகழ்வில், பள்ளி முதல்வர் சுதா, தாளாளர் சுமதி, மூத்த முதல்வர் சங்கர்லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
