/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவி பலாத்காரம் கேரள வாலிபரை தட்டித் துாக்கிய போலீஸ்
/
மாணவி பலாத்காரம் கேரள வாலிபரை தட்டித் துாக்கிய போலீஸ்
மாணவி பலாத்காரம் கேரள வாலிபரை தட்டித் துாக்கிய போலீஸ்
மாணவி பலாத்காரம் கேரள வாலிபரை தட்டித் துாக்கிய போலீஸ்
ADDED : ஜூலை 27, 2024 12:24 AM

சென்னை, கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் நந்துலால், 23. இவர், சென்னை, விருகம்பாக்கத்தில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கல்லுாரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 19ம் தேதி மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த நந்துலால், வீடு புகுந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி, தனங்கு நேர்ந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். இதில், சம்பவம் நடந்த அன்று வாலிபர் தலைமறைவானது தெரிய வந்தது. மேலும், அவர் சொந்த ஊரான கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அங்கு விரைந்த தனிப்படை போலீசார், நேற்று நந்துலாலை கைது, சென்னைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
சிட்டி/கல்லுாரி மாணவி பாலியல் பலாத்காரம்
கேரளாவில் பதுங்கிய வாலிபர் கைது
சென்னை, ஜூலை 27-
தனியாக இருந்த கல்லுாரி மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை கேரளாவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவைச் சேர்ந்த, 22 வயது பெண், சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கல்லுாரி ஒன்றில் படித்து வந்தார்.
இவர் தங்கி உள்ள வீட்டின் அருகே, சினிமா தொடர்பான நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. இதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த நந்துலால்,23 என்பவர் பணிபுகிறார்.
இவரும், தன் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் நந்துலாலிடம் கல்லுாரி மாணவி தயக்கமின்றி பேசி வந்துள்ளார். இதை அந்த வாலிபர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்.
சில தினங்களுக்கு முன், அதிகாலை, 5:30 மணியளவில், கல்லுாரி மாணவி தங்கி இருந்த வீட்டின் கதவை நந்துலால் தட்டி உள்ளார். மாணவி கதவை திறந்தபோது வலுக்கட்டாயமாக உள்ளே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டார்.
இதுகுறித்து கல்லுாரி மாணவி, விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். நந்துலால் சொந்த மாநிலத்திற்கு தப்பி இருப்பது தெரியவந்தது.
அங்கு தனிப்படை போலீசார் முகாமிட்டு நந்துலாலை கைது செய்து, கேரள மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், அங்கிருந்து அழைத்து வந்து சென்னை புழல் சிறையில் நேற்று முன் தினம் அடைத்துள்ளனர்.
**
பாக்ஸ்//
போலீசாரை தாக்க
திட்டம் போட்ட நந்துலால்
கேரளாவில் தனிப்படை ஆறு பேர் தன்னை நெருங்கிவிட்டதை அறிந்த நந்துலால், தன் கூட்டாளிகள், 10 பேரை திரட்டி உள்ளார். தன் கூட்டாளிகளுக்கு தனிப்படை போலீசாரை அடையாளம் காட்டி, இவர்கள் என்னை கடத்த வந்து இருப்பதால் தாக்குதல் நடத்த வேண்டும் என, திட்டம் போட்டுள்ளார். முடிந்தால் என்னை பிடித்துப்பாருங்கள் எனவும் தனிப்படை போலீசாருக்கு சவால் விட்டார் என, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
**