/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரு தரப்பு மாணவர்கள் மோதல் முறியடிப்பு
/
இரு தரப்பு மாணவர்கள் மோதல் முறியடிப்பு
ADDED : ஜூலை 31, 2024 12:08 AM
சென்னை, மெரினா காமராஜர் சாலை, கண்ணகி சிலை அருகே மாநிலக்கல்லுாரி மாணவர்கள் 30 பேர், இரு தரப்பாக பிரிந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேற்று மதியம் 12:30 மணியளவில் மோதலில் ஈடுபட இருந்தனர். அப்போது மெரினா காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணன் அவ்வழியாக ரோந்து வாகனத்தில் சென்றார். போலீசார் வருவதைப் பார்த்த மாணவர்கள், அங்கிருந்து சிதறி ஓடினர். மெரினா சர்வீஸ் சாலை வழியாக ஓடிய மாணவர் ஒருவர், 2 அடி கத்தியை அங்குள்ள புதரில் வீசிச் சென்றார்.
அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவலர்கள் கமலா, சுதா இதை கவனித்து, கத்தியை சிறப்பு உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், ஆயுதங்களுடன் வந்த மாணவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.