ADDED : ஜூலை 16, 2026 09:32 PM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை மாநிலக் கல்லுாரியில் சேர்ந்த மாணவர்கள் பலர், விக்டோரியா மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதியில் மாணவர்களுக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகவும், உணவுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி, மாநில கல்லுாரி வளாகத்தில் மாணவர்கள் சிலர், நேற்று போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையில், விடுதியில் தரமான உணவு வழங்கப்படுவதாக கூறி, போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு எதிரான மற்றொரு தரப்பு மாணவர்களும், கல்லுாரி வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
இரு தரப்பு மாணவர்களும், மாறி மாறி போராட்டம் நடத்தியதால், கல்லுாரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கல்லுாரி நிர்வாகம், மாணவர்களிடையே சமரச பேச்சு நடத்தியது. இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
