
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா சாலை, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தில் நடக்கும் போர் விவகாரத்தில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பலதரப்பில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தகைய மாணவர்கள் மீது, அமெரிக்காவில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இதை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த, 30க்கு மேற்பட்டோர், சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்தை, நேற்று காலை முற்றுகையிட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனால், மாணவர்கள் - போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்களை, போலீசார் கைது செய்தனர். இதனால், அண்ணா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

