/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திறப்பு விழாவோடு முடங்கிய துணை சுகாதார நிலையம்
/
திறப்பு விழாவோடு முடங்கிய துணை சுகாதார நிலையம்
ADDED : மார் 03, 2025 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி,ந்தமல்லி ஒன்றியம் அகரமேல் ஊராட்சியில், 15 வது நிதிக்குழு சுகாதார மானியம் திட்டத்தின் கீழ், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், துணை சுகாதார நிலையம் புதிதாய் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த சுகாதார நிலையத்தை, கடந்த மாதம் 12ம் தேதி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
திறப்பு விழா நடந்தது முதல், இந்த நிலையம் செயல்பாட்டிற்கு வராமல் மூடியே கிடக்கிறது. இதனால், இங்கு சிகிச்சை பெற செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இந்த துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.