/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி பயிற்சி மைய வளாகத்தில் திடீர் தீ
/
கிண்டி பயிற்சி மைய வளாகத்தில் திடீர் தீ
ADDED : மே 30, 2024 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிண்டி, கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில், தமிழ்நாடு அறிவியல் கண்ணாடி பாகங்கள் தயாரிப்பு பயிற்சி மையம் உள்ளது. இந்த மைய வளாகத்தை சுற்றி குப்பை, மரக்கழிவுகள் அதிகம் குவிந்துள்ளன.
நேற்று காலை, இந்த குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். கொழுந்துவிட்டு எரிந்த தீயை, கிண்டி தீயணைப்பு படையினர் அணைத்தனர்.
பொருட்களுக்கும், ஊழியர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. சம்பவம் தொடர்பாக, கிண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.