/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒவர் லோடு ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் அவதி
/
ஒவர் லோடு ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் அவதி
ADDED : மே 23, 2024 12:34 AM

குன்றத்துார், மாங்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில், ஏராளமான கட்டுமான பணிகள் நடக்கின்றன. இங்கு, கட்டுமானத்திற்கு தேவையான ஜல்லிக்கற்களை, அளவுக்கு அதிகமாக ஏற்றிக்கொண்டு, லாரிகள் செல்கின்றன.
இவற்றின் மீது தார்ப்பாய் மூடாமல் செல்வதால் வேகத்தடை, பள்ளமான சாலைகளை வாகனங்கள் கடந்து செல்லும் போது, ஜல்லிக்கற்கள் கீழே சிதறி விழுகின்றன.
இந்த கற்கள், பைக்கில் வருவோர் மீதும், கார் மீதும் விழுகின்றன. மேலும், சாலைகளிலும் ஜல்லிக்கற்கள் சிதறிக் கிடப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. தார்ப்பாய் மூடாமல் ஓவர் லோடு ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜனார்த்தனர், குன்றத்துார்.

