/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிடப்பில் போடப்பட்ட வடிகால் பணியால் அரும்பாக்கத்தில் அவதி
/
கிடப்பில் போடப்பட்ட வடிகால் பணியால் அரும்பாக்கத்தில் அவதி
கிடப்பில் போடப்பட்ட வடிகால் பணியால் அரும்பாக்கத்தில் அவதி
கிடப்பில் போடப்பட்ட வடிகால் பணியால் அரும்பாக்கத்தில் அவதி
ADDED : மே 30, 2024 12:16 AM

அரும்பாக்கம், நான்கு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு, அரைகுறையாக விடப்பட்ட மழைநீர் வடிகால் பணியால், அரும்பாக்கத்தில் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.
சென்னை, அண்ணா நகர் மண்டலத்தில், 105 கோடி ரூபாய் செலவில், அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனி, வில்லிவாக்கம் சிட்கோ நகர் மற்றும் அகத்தியர் நகர் உள்ளிட்ட, 25 இடங்களில், மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் அரைகுறையாக விடப்பட்டுள்ளன.
அண்ணா நகர் மண்டலம், 105வது வார்டில், அரும்பாக்கம், பெருமாள் கோவில் தெரு உள்ளது. இத்தெருவில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன், வடிகால் அமைக்கும் பணிகள் துவங்கின.
பணிகளை முழுதாக முடிக்காமல், அரைகுறையாக விட்டதால், குடியிருப்பு மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
அதிலும், சில இடங்களில வீட்டின் வாசல் பகுதிகளில் பள்ளம் தோண்டி அப்படியே விட்டதால், குடியிருப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், புதைக்கப்பட்ட மின் வடங்கள் சாலையில் செல்வதால், விபத்து அபாயம் நிலவுகிறது.
மேலும், தற்போது கோடை மழை பெய்வதால், வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், கழிவுநீர் தேங்கி சீர்கேடு நிலவுகிறது.
எனே, பருவ மழைக்கு முன், கிடப்பில் உள்ள பணிகளை முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.