/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதுமாப்பிளை தீக்குளித்து தற்கொலை
/
புதுமாப்பிளை தீக்குளித்து தற்கொலை
ADDED : மார் 08, 2025 12:39 AM
படப்பை :தாம்பரம் அருகே மாடம்பாக்கம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 35. இவர், வீட்டின் அருகே பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தார்.
இவருக்கு, மணலியைச் சேர்ந்த கவுசல்யா, 28, என்பவருடன், கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. புதுமண தம்பதி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இரண்டு மாதத்திற்கு முன் ஜெயகுமாரை பிரிந்து, கவுசல்யா தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயகுமார், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தற்கொலை செய்து கொள்ள மண்ணெண்ணெய் உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.