/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கேபிள்'களை எரித்த மர்ம நபர்கள் சூளைமேடு பகுதிவாசிகள் பீதி
/
'கேபிள்'களை எரித்த மர்ம நபர்கள் சூளைமேடு பகுதிவாசிகள் பீதி
'கேபிள்'களை எரித்த மர்ம நபர்கள் சூளைமேடு பகுதிவாசிகள் பீதி
'கேபிள்'களை எரித்த மர்ம நபர்கள் சூளைமேடு பகுதிவாசிகள் பீதி
ADDED : ஆக 30, 2024 12:31 AM

சூளைமேடு,
கூவம் கரையோரத்தில், மர்ம நபர்கள் அத்துமீறி, 'கேபிள்'களை தீ வைத்து எரித்தனர். இதிலிருந்து வெளியான கரும்புகையால், சூளைமேடு சுற்றுவட்டார பகுதிவாசிகள் பீதியடைந்தனர்.
சூளைமேடு, நமச்சிவாயபுரம் அருகில், கூவம் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் இணைப்பு பாலத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து, நேற்று மதியம் 2:00 மணியளவில், அதிக அளவில் கரும்புகை வெளியேறியது.
அவ்வழியாக சென்றவர்கள் கூவத்தின் அருகில் சென்று பார்த்த போது, 10க்கும் மேற்பட்ட தனியாருக்குச் சொந்தமான 'கேபிள்'களை, மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது தெரிந்தது.
தீ மளமளவென பரவியதில், அருகில் கிடந்த பழைய சோபா உள்ளிட்ட குப்பையும் சேர்ந்து எரியத் துவங்கின. சம்பவம் அறிந்து வந்த சூளைமேடு போலீசார், கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்ததால், அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
தீயால் வெளியேறிய துர்நாற்றத்துடன் கூடிய கரும்புகை, சில மணிநேரம் சூளைமேடு சுற்றுவட்டார பகுதிகளை சூழ்ந்ததால், அப்பகுதிவாசிகள் பீதியடைந்தனர்.