/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : மார் 29, 2024 12:20 AM

சென்னை, அடையாறு, காந்தி நகரில் அமைந்துள்ளது சுந்தர விநாயகர் கோவில். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், திருப்பணி முடிந்து ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இதை முன்னிட்டு, 24ம் தேதி காலை யாகசாலை துவங்கி, கணபதி பிரார்த்தனை, அனுக்ஞை, சங்கல்பம், கோபூஜை, கணபதி ஹோமம் ஆகியவை நடந்தன.
கடந்த 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை மகாலட்சுமி, நவக்கிரஹ ஹோமம், தனபூஜை, யாகசாலை நிர்மாணம் நடந்தன. தொடர்ந்து அங்குரார்ப்பணம், பூர்ணாஹூதி, ஐந்து கால பூஜைகள் நடந்தன.
கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7:30 மணிக்கு, ஆறாம் கால யாகசாலை பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து, யாத்ரா தானம், மகா பூர்ணாஹூதி நடத்தப்பட்டது. காலை 9:30 மணிக்கு விமான கலசங்களுக்கு கும்ப நீர் சேகர்க்கப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகள், கோவில் செயல் அலுவலர் முரளீதரன் தலைமையில் செய்யப்பட்டிருந்தது.

