/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெய்நிகர் தொழில்நுட்பத்தில் அறுவை சிகிச்சை பயிற்சி
/
மெய்நிகர் தொழில்நுட்பத்தில் அறுவை சிகிச்சை பயிற்சி
மெய்நிகர் தொழில்நுட்பத்தில் அறுவை சிகிச்சை பயிற்சி
மெய்நிகர் தொழில்நுட்பத்தில் அறுவை சிகிச்சை பயிற்சி
ADDED : மார் 30, 2024 12:33 AM
சென்னை, சென்னை ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மெடிசிம் வி.ஆர். என்ற நிறுவனத்துடன் இணைந்து, மாணவர்கள் மருத்துவ சிகிச்சை பயிற்சி பெறுவதற்கான மெய்நிகர் ஆய்வகத்தை துவக்க உள்ளது.
இதன் வாயிலாக, மாணவர்கள் நோயாளிக்கு நேரடியாக அறுவை சிகிச்சை செய்வது போன்ற, பாதுகாப்பான முறையில் சிகிச்சை முறைகளை பயின்று திறன் பெற முடியும்.
இதற்கான ஒப்பந்தத்தில், பல்கலை துணைவேந்தர் உமாசேகர், மெடிசிம் வி.ஆர். நிறுவன இணை இயக்குனர் ஆதித் சின்னசாமி கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து, துணைவேந்தர் உமாசேகர் கூறியதாவது:
இந்த ஆய்வகத்தின் வாயிலாக, ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன்தின் 14 கல்லுாரிகளில் உள்ள பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் அறுவை சிகிச்சை பயிற்சியை திறம்பட பெற முடியும்.
இந்த மெய்நிகர் பயன்பாடு ஆய்வு மற்றும் பயிற்சி முறைகளில் மருத்துவம், பொறியியல் துறைகளின் இணை பங்களிப்புக்கு சான்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

