தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மே 26, 2024 12:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2024 12:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்


 ரத்ன விநாயகர் கோவில்

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 6:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

 வரசித்தி விநாயகர் கோவில்

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 5:00. இடம்: இ.பி., ஆபீஸ் எதிரில், வேளச்சேரி.

 வேங்கடேசப் பெருமாள் கோவில்

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமஞ்சனம், ஆராதனை, உற்சவர் ஊஞ்சல் சேவை - காலை 8:00 மணிக்கு மேல், சிறப்பு அலங்காரத்துடன் உற்சவர் உள்புறப்பாடு - மாலை 7:00 மணிக்கு மேல். இடம்: சூளை.

 காரணீஸ்வரர் கோவில்

நாகராஜன் தலைமையிலான ஆலய உழவார தொண்டு சீர் திருக்கூட்டத்தின் இறை பணி. காலை 9:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை. இடம்: சைதாப்பேட்டை.

 திருக்கல்யாணம்

பூர்ணா புஷ்கலாம்பாள் சமேத தர்ம சாஸ்தா திருக்கல்யாணம் -- காலை 7:30. இடம்: ஸிரி மஹால், ஏரிக்கரை தெரு, மடிப்பாக்கம்.

 மாணிக்கேஸ்வரர் கோவில்

வேணுகோபால் தலைமையிலான நமசிவாய உழவாரப் படையின் 262வது இறை பணி - காலை 8:00 மணி முதல் இடம்: லிங்க பையன் பேட்டை, பொன்னேரி.

பொது


 இலவச கராத்தே பயிற்சி

பெண்களுக்கு காலை 6:00 முதல் 8:00 மணி வரை. ஆண்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அஜய் ஆர்ட்ஸ் ஆப் வேர்ல்டு, பஜனை கோவில் தெரு, ரங்கநாதபுரம், மேடவாக்கம். தொடர்புக்கு: 99412 29595.

 சிரிக்கலாம் வாங்க

தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றம் நடத்தும் வாங்க சிரிக்கலாம் - மாலை 4:00 மணி. இடம்: வள்ளுவர் குருகுலம் பள்ளி, கடப்பேரி, தாம்பரம்.

 பரத நாட்டிய நிகழ்ச்சி

பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பாக ஜெயலட்சுமி நாட்டியப் பள்ளியின் பரதநாட்டியம் நிகழ்ச்சி - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.

 சொற்பொழிவு

திருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் 'திருப்புகழ்' தொடர் சொற்பொழிவு - காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, திருவொற்றியூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us