ADDED : மார் 26, 2024 12:12 AM
ஆன்மிகம்
கபாலீஸ்வரர் கோவில்
பங்குனி பெருவிழாவை முன்னிட்டு உமா மகேஸ்வரர் தரிசனம் - -காலை 6:30 மணி. பந்தம்பறி விழா- - மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
மருந்தீஸ்வரர் கோவில்
பங்குனி பெருவிழாவை முன்னிட்டு சந்திரசேகரர் தெப்ப திருவிழா - -மாலை 6:00 மணி. வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா- - இரவு 9:00 மணி. இடம்: திருவான்மியூர்.
ஆண்டவர் கோவில்
பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு, ஆண்டவர் கோவிலில் சண்முகர் வள்ளி, தெய்வானை தெப்ப திருவிழா- - இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.
பார்த்தசாரதி கோவில்
பெருமாள் கோவிலில் திருவாரதனம் - -காலை 6:15 மணி. வரதர் பெரிய மாடவீதி புறப்பாடு - -மாலை 6:30 மணி. கூரத்தாழ்வார் திருநட்சத்திர விழா- - இரவு 7:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
சுந்தர விநாயகர் கோவில்
கும்பாபிஷேகம் முன்னிட்டு விசேஷ சந்தி, 2ம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹுதி- - காலை 8:00 மணி முதல். இடம்: அடையாறு.
பாலசுப்ரமணிய சுவாமி கோவில்
பங்குனி உத்திர பிரம்மோற்ச விழாவில் ஸ்ரீ இடும்பன் பூஜை விடையாற்றி - காலை 10:00 மணி. இடம்: குரோம்பேட்டை.
ரங்கநாத பெருமாள் கோவில்
பங்குனி பெருவிழா பிரம்மோற்சவத்தில் அங்குரார்பணம் - மாலை. இடம்: திருநீர்மலை.
மஹா கும்பாபிஷேகம்
விசேஷ சந்தி நான்காம் கால யாக பூஜை - காலை 8:45 - 11:30 மணி வரை, விசேஷ சந்தி, தீபாராதனை - மாலை 5:30 - 8:30 வரை. இடம்: அய்யப்ப சுவாமி திருக்கோவில், ராஜா அண்ணாமலைபுரம்.
கண்காட்சி
மைசூர் ஓவியம்
சி.பி.ராமசாமி ஆர்ட் மையத்தில் மைசூர் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை - -காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆழ்வார்பேட்டை.
