ADDED : ஜூலை 09, 2024 12:01 AM
ஆன்மிகம்
திருக்குட நன்னீராட்டு பெருவிழா
இரண்டாம் கால வேள்வி - காலை 8:00 மணி. மூன்றாம் கால வேள்வி - மாலை 6:00 மணி. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
ஸ்ரீபாலசுப்ரமணிய சங்கத்தின் சங்கீத உபன்யாசம் - ஸ்ரீ பக்த விஜயம் நிகழ்ச்சி, மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு, மாலை 5:30 மணி. பெருமாள் ஆஸ்தானம், மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
குருவாயூரப்பன் கோவில்
கும்பாபிஷேகம் முன்னிட்டு, மூர்த்தி ஹோமம், பிரசன்ன பூஜை, காலை 8:30 மணி. அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், சதுர்வேத பாராயணம், மாலை 5:00 மணி முதல். இடம்: நங்கநல்லுார்.
வேத பாராயணம்
அழகிய சிங்கர் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மஹாதேசிருடை, 69வது திருநட்சத்திரபூர்த்தியை முன்னிட்டு விஸ்வரூப தரிசனம்,வேத பாராயணம், காலை 5:00 மணி முதல்.இடம்: அஹோபில மடம், கிழக்கு தாம்பரம்.
பொது
இலவச யோகா பயிற்சி
சத்யானந்தா யோக மையம் சார்பில் இலவச யோகா வகுப்பு, காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடம்: திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி. மற்றும் பி2, லட்சுமி நகர், பிரதான சாலை, நங்கநல்லுார்.
முற்றோதுதல்
மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆடலரசன் குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் - காலை 8:00 மதல் 1:00 மணி வரை. இடம்: தண்டீஸ்வரர் கோவில். வேளச்சேரி.
கண்காட்சி
பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.