ADDED : ஆக 15, 2024 12:10 AM
பொது
ஐ.ஏ.எஸ்., பயிற்சி வகுப்பு
குரு விருக்ஷா ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கான போக்கஸ் ஐ.ஏ.எஸ்., நிகழ்ச்சி - மாலை 4:00 மணி. இடம்: அகர்வால் வித்யாலயா வளாகம், இ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி.
யோகா பயிற்சி
சத்யானந்தா யோக மையம் சார்பில் இலவச யோகா வகுப்பு - காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடங்கள்: திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி மற்றும் பி2, லட்சுமி நகர், பிரதான சாலை, நங்கநல்லுார்.
சுதந்திர தின விழா
வி.ஐ.டி., கல்லுாரியில் சுதந்திர தின விழா - காலை 10:00 சிறப்பு விருந்தினர் முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா. இடம்: வி.ஐ.டி., கல்லுாரி வளாகம், வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை.
கொடியேற்றுபவர்: வி.கிருஷ்ணமூர்த்தி, சிறப்புரை: ஆர்.நுாருல்லா, காலை 9:00 மணி. இடம்: ஜெயேந்திர பெரியவா நினைவு ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம், மாமண்டூர்.
கண்காட்சி
பூம்புகார் நிறுவனம் சார்பில் 'கிருஷ்ண தரிசனம்' விற்பனை கண்காட்சி- - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.
பதிப்புலகின் பேரொளிகள்
இலக்கிய வீதி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், பாரதிய வித்யா பவன் சார்பில் 'பதிப்புலகின் பேரொளிகள்' தொடர் நிகழ்ச்சி - மாலை 6:15. இடம்: பாரதிய வித்யா பவன், கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர்.
ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்
நரசிம்மர் கருடசேவை புறப்பாடு- - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
பன்னிரு திருமுறை விழாவை முன்னிட்டு சுவாமிநாத தேசிகர் ஓதுவார் திருமுறை விண்ணப்பம்- - மாலை 4:00 மணி. ம.கி.ரமணனின் சொற்பொழிவு - -இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
ஸ்ரீநிவாஸ பெருமாள் கோவில்
பவித்ர உற்சவம் - மாலை 5:00 மணிக்கு பகவத் பிரார்த்தனை, அதிவாச திருமஞ்சனம், சோம கும்ப ஸ்தாபனம். இடம்: ராஜேந்திரா நகர், கீழ்கட்டளை.
வாய்ப்பாட்டு
பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பில் வாய்ப்பாட்டு - மாலை 6:30 மணி. இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
வாராஹி நவராத்திரி
கொய்யா பழங்களால் அபிஷேகம் - -காலை 7:00 மணி. சிறப்பு பூஜை -- மாலை 6:45 மணி. இடம்: பஞ்சமி வாராஹி அறச்சபை, எஸ்.எஸ்.மஹால், பள்ளிக்கரணை.