/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டி - 20' சாய்ராம் வெற்றி: சவீதா கல்லுாரி ஏமாற்றம்
/
'டி - 20' சாய்ராம் வெற்றி: சவீதா கல்லுாரி ஏமாற்றம்
'டி - 20' சாய்ராம் வெற்றி: சவீதா கல்லுாரி ஏமாற்றம்
'டி - 20' சாய்ராம் வெற்றி: சவீதா கல்லுாரி ஏமாற்றம்
ADDED : ஆக 03, 2024 12:30 AM

சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலை விளையாட்டு துறை இயக்குனரகத்தின் சார்பில், நிறுவனர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி, காட்டாங்கொளத்துார் வளாகத்தில் நடக்கிறது.
இதில், 12 அணிகள் பங்கேற்று 'நாக் அவுட்' முறையில் மோதி வருகின்றன. நேற்று காலை நடந்த போட்டியில், சாய்ராம் கல்லுாரி மற்றும் சவீதா பொறியியல் கல்லுாரி அணிகள் மோதின.
'டாஸ்' வென்ற சாய்ராம் கல்லுாரி, முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் அடித்தது. அந்த அணியின் சுபாஷ் 3 விக்கெட்கள் சாய்த்தார்.
எளிதான இலக்கை நோக்கி, அடுத்து பேட் செய்ய சவீதா அணி களமிறங்கிறது. ஆனால், சாய்ராம் கல்லுாரி பந்து வீச்சாளர்கள் இனியன் மற்றும் விபோ ஆகியோர் சிம்ம சொப்பனமாக விளங்கினர். அவர்கள் முறையே, 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டும், 14 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
முடிவில், 18.3 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்து, சவீதா கல்லுாரி தோல்வி அடைந்தது.
இதனால், 15 ரன்கள் வித்தியாசத்தில் சாய்ராம் கல்லுாரி அபார வெற்றி பெற்றது.