/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டேபிள் டென்னிஸ் போட்டி வினோத், யுவஸ்ரீ சாம்பியன்
/
டேபிள் டென்னிஸ் போட்டி வினோத், யுவஸ்ரீ சாம்பியன்
ADDED : மே 01, 2024 12:51 AM

சென்னை, வியோம் டேபிள் டென்னிஸ் அகாடமி சார்பில், திருவள்ளூர் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி, திருத்தணியில் நடந்தது.
இதில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சிறுவர் - சிறுமியர் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.
இதில், ஆண்களுக்கான போட்டியில், வினோத் 3 -- 1 என்ற கணக்கில் சித்தார்த்தை தோற்கடித்து முதலிடம் பிடித்தார்.
அதேபோல் 17 வயதில் சித்தார்த், 15 வயதில் அருணாச்சலம், 13 வயதில் கிரிஷ் வினோத், 11 வயதில் ரஹீத் ஆகியோர் வெற்றி பெற்று, முதல் இடங்களை பிடித்தனர்.
பெண்களில் யுவஸ்ரீ 3 - - 0 என்ற கணக்கில் லத்திகாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சிறுமியரில் 19 வயதில் யுவஸ்ரீ , 17 மற்றும் 15 வயதில் மெர்சி, 13 வயதில் பிரதிக்ஷா, 11 வயதில் தர்ஷிகா ஆகியோர் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.