/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தமிழக, மங்கோலியா வீரர்கள் செஸ் போட்டியில் முன்னிலை
/
தமிழக, மங்கோலியா வீரர்கள் செஸ் போட்டியில் முன்னிலை
தமிழக, மங்கோலியா வீரர்கள் செஸ் போட்டியில் முன்னிலை
தமிழக, மங்கோலியா வீரர்கள் செஸ் போட்டியில் முன்னிலை
ADDED : ஆக 10, 2024 12:46 AM

சென்னை, தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்ட்டு சர்க்யூட் செஸ் போட்டியை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்தி வருகிறது. இந்திய வீரர்களுக்கு சர்வதேச மாஸ்டராக அங்கீகாரம் கிடைப்பதற்காக, இப்போட்டி நடத்தப்படுகிறது.
மூன்றாம் கட்டமாக நடந்து வரும் இப்போட்டியில், ஐந்து இந்திய வீரர்கள், ஐந்து வெளிநாட்டு வீரர்களுடன் மோதி வருகின்றனர்.
நேற்று காலை நடந்த ஐந்தாவது சுற்றுக்கான ஆட்டத்தில், தமிழக வீரர் ஹர்ஷித், ரஷ்யா வீரரான சொலஷ்விலிடேவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால், ஹர்ஷித் 4 புள்ளிகள் பெற்று, முன்னிலையை தக்க வைத்தார்.
மற்றொரு போட்டியில், மங்கோலியா வீரர் உரிந்துயா ஊர்ட்சைக், தமிழக வீரர் விஸ்வேஷை தோற்கடித்து, நான்கு புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இவ்விருவரை தொடர்ந்து, அடுத்தபடியாக தமிழக வீரர் ஆகாஷ், ரஷ்யாவின் அலேக்சாண்டர், ஸ்லோவாக்கியாவின் மானிக் மிகுலாஸ் ஆகியோர், தலா மூன்று புள்ளிகளில் உள்ளனர்.