ADDED : ஆக 03, 2024 12:32 AM

சென்னை, டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரி, ஒவ்வொரு விழா காலத்திலும், வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி, ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, ஆடி அர்ப்பணம் எனும் புதிய நகை தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது.
இந்த நிகழ்வு, சென்னை பாண்டி பஜார் தனிஷ்க் ஜுவல்லரியிலும், தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள தனிஷ்க் ஜுவல்லரியிலும், பகுதி வணிக மேலாளர் ஜெகன் ரவி, லோகேஷ்; தனிஷ்க் பாண்டிபஜார் கிளை மேலாளர் ரத்தீஷ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
ஆடிப்பெருக்கை கொண்டாடும் வகையில், தனிஷ்க், தங்க நகைகளுக்கு, செய்கூலியில் 20 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.
நாட்டில் எந்த நகை கடையில் வாங்கி இருந்தாலும், அந்த பழைய தங்கத்தின் மீது, 100 சதவீத பரிமாற்ற மதிப்பை பெறும் வாய்ப்பை அளிக்கிறது.
அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், இந்த சலுகை, ஆண்டு முழுதும் வழங்கப்படுகிறது. சிறப்பு சலுகை ஆக., 4 வரை, தமிழகத்தில் உள்ள அனைத்து தனிஷ்க் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என, தனிஷ்க் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.