/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
/
டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ADDED : ஜூலை 11, 2024 12:26 AM

தண்டையார்பேட்டைவடசென்னை தண்டையார்பேட்டை பரமேஸ்வரன் நகரில் செயல்படும், இந்தியன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் எனும் ஐ.ஓ.சி., நிறுவனம் முன், ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில், லாரி ஓட்டுனர்கள் சங்கத்தினர் நேற்று ஈடுபட்டனர்.
சென்னை ஆசனுார் பெட்ரோலிய டேங்கர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம், சென்னை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோலியம் லாரி ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் நலச்சங்கத்தினர் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆசனுார் பெட்ரோலிய டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலர் வேலு கூறியதாவது:
டேங்கர் லாரிகள் செல்வதற்கான சாலைகள், எண்ணுார் பகுதியில் குண்டும், குழியுமாக உள்ளன. மெட்ரோ ரயில் திட்ட பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் வி.ஐ.பி.,க்கள், வி.வி.ஐ.பி.,க்கள் வருகையின்போது, சென்னை போக்குவரத்து போலீசார் அடிக்கடி வழித்தடத்தை மாற்றுக்கின்றனர்.
இதனால் அதிக கிலோ மீட்டர் சுற்றிச் செல்வதால், டீசல் செலவு அதிகமாகிறது. தவிர, சுங்கச்சாவடி வசூலும் நடக்கிறது. டேங்கர் லாரி உரிமையாளர்கள், ஒவ்வொரு லாரிக்கும் மாதந்தோறும் 5,000 ரூபாய் இழக்கின்றனர்.
தண்டையார்பேட்டை, அத்திப்பட்டு ஆகிய இரண்டு இடங்களில், பெட்ரோல், டீசல் நிரப்பும் முனையங்கள் உள்ளன. வல்லுாரில் புதிய முனையத்தை விரைவில் திறக்க வேண்டும்.
இவை உட்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். 15 நாள் கால அவசாகத்தில், ஐ.ஓ.சி., நிர்வாகம் எந்தவித கோரிக்கையும் நிறைவேற்றவில்லையெனில், பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.