/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெசப்பாக்கத்தில் தார்ச்சாலை அமைப்பு
/
நெசப்பாக்கத்தில் தார்ச்சாலை அமைப்பு
ADDED : ஏப் 22, 2024 01:23 AM

நெசப்பாக்கம்:ராமாபுரம் மற்றும் நெசப்பாக்கம், கே.கே., நகர் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக, ராமாபுரம் பிரதான சாலை உள்ளது.
இச்சாலை, கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களின் எல்லையாக உள்ளது. இதில், கோடம்பாக்கம் மண்டலம், 137வது வார்டு ராமாபுரம் பிரதான சாலை, எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையம் அருகே, குண்டும் குழியுமாக மாறி இருந்தது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, அப்பகுதியில் 'வெட்மிக்ஸ்' எனும் கலவை கொட்டப்பட்டு, சீர் செய்யப்பட்டது.
மேலும், இச்சாலையின் உள்ள நெசப்பாக்கம் ஏரிக்கரை தெருவும் குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதுகுறித்தும் நம் நாளிதழில் செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன.
இதன் எதிரொலியாக, சில வாரங்களுக்கு முன் இப்பகுதியில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

