ADDED : ஜூலை 07, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
அம்பத்தூர்: பணி நிரந்தரம் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘டாஸ்மாக்’ மது கிடங்கை முற்றுகையிட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பத்துார் தொழிற்பேட்டையில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் ‘டாஸ்மாக்’ மது கிடங்கு அமைந்துள்ளது. பணி நிரந்தரம், ஓய்வூதியம் உட்பட எட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிராக, டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர், கிடங்கை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். வரும் 10ம் தேதி குடும்பத்துடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
