/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நண்பர்களுடன் சேர்ந்து தாக்குதல் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
/
நண்பர்களுடன் சேர்ந்து தாக்குதல் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
நண்பர்களுடன் சேர்ந்து தாக்குதல் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
நண்பர்களுடன் சேர்ந்து தாக்குதல் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : மே 03, 2024 12:37 AM
சென்னை, சென்னை, பூந்தமல்லி ராஜா அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யசொரூபன், 24. கூலித்தொழிலாளி.
இவர், 2017 அக்., 18 தீபாவளியன்று, சூளைமேடில் இருந்து நண்பர் ஹரியின் ஆட்டோவில், மற்றொரு நண்பரான ராஜ்குமாருடன் சென்றார்.
கில் நகர் அருகே உள்ள வளைவில், சஞ்சய், 20, என்பவர் மீது ஆட்டோ உரசியதால், அவர் தன் நண்பர்களான ரமேஷ், 40, அப்பு, 30, ரூபேஷ் ஆகியோருடன் சேர்ந்து, சத்ய சொரூபனை கத்தியால் வெட்டியுள்ளனர்.
படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி, சூளைமேடு போலீசில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
குற்றம்சாட்டப்பட்ட நபர்களில், சஞ்சய் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
எனவே, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், அபராதமாக 1 லட்சம் ரூபாயும் விதிக்கப்படுகிறது. ரூபேஷுக்கு மூன்று வார சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
ரமேஷ், அப்பு மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், வழக்கில் இருந்து அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். அபராத தொகையை, பாதிக்கப்பட்ட சத்யசொரூபனுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு, நீதிபதி தீர்ப்பளித்தார்.