/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளம்பெண் தற்கொலை: பெற்றோர் போலீசில் புகார்
/
இளம்பெண் தற்கொலை: பெற்றோர் போலீசில் புகார்
ADDED : மே 04, 2024 12:20 AM
பூந்தமல்லி, கடலுார் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த வேலு மகள் ரமணி, 23. இவர், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார்.
நேற்று முன்தினம் ரமணி வீட்டை விட்டு வெளியே வராததால், அருகில் வசிப்போர் நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, ரமணி துாக்கிட்டு இறந்து கிடந்தார். உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
முதல்கட்ட விசாரணையில், ரமணி நசரத்பேட்டையில் ஓராண்டாக, வாடகை வீட்டில் மோகன்ராஜ் என்பவருடன், திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தது தெரிந்தது.
ரமணிக்கும், மோகன்ராஜுக்கும் தகராறு ஏற்பட்டதால் ரமணி தற்கொலை செய்து கொண்டாரா, வேறு காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், ரமணி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.