/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
45 அடி உயர முனீஸ்வரர் சிலைக்கு விமரிசையாக நடந்த கும்பாபிஷேகம்
/
45 அடி உயர முனீஸ்வரர் சிலைக்கு விமரிசையாக நடந்த கும்பாபிஷேகம்
45 அடி உயர முனீஸ்வரர் சிலைக்கு விமரிசையாக நடந்த கும்பாபிஷேகம்
45 அடி உயர முனீஸ்வரர் சிலைக்கு விமரிசையாக நடந்த கும்பாபிஷேகம்
ADDED : மே 04, 2024 12:26 AM

எண்ணுார், எண்ணுார், பர்மா நகரில் பிரசித்தி பெற்ற பீலிக்கான் முனீஸ்வரர் - அங்காள ஈஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், 45 அடி உயரத்தில் முனீஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மேலும், கோவிலின் 72 அடி உயர ராஜகோபுரம், 41 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, 43 அடி உயர அங்காள ஈஸ்வரி சிலைகள் மற்றும் கோவில் வளாகம் முழுதும் புனரமைக்கப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இதையொட்டி, கடந்த 1ம் தேதி கணபதிஹோமம், லஷ்மி பூஜை, நவக்கிரஹ ஹோமம், தனபூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை உள்ளிட்டவை நடந்தன.
நேற்று முன்தினம், இரண்டாம் கால யாகபூஜை, விக்கிரகங்கள் பிரதிஷ்டை, பிரதிஷ்டை பூஜை ஹோமம், மூன்றாம் கால பூஜை, நாடி சந்தானம், சங்கல்பம், சத்துவா அர்ச்சனை பூஜை ஹோமம் தீபாராதனை நடந்தது.
நேற்று காலை, புண்ணியாவதன ேஹாமம், ரிக் ஷா பந்தனம், கலச பூஜை, மஹா பூர்ணாஹூதி முடிவுற்று, கடம் புறப்பாடானது.
பின், ராஜகோபுரம், ஆஞ்சநேயர், அங்காள ஈஸ்வரி சிலைகளுக்கும் புதிதாக அமைக்கப்பட்ட முனீஸ்வரர் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
பின், பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், மண்டலக்குழு தலைவர் தனியரசு, பகுதி செயலர் அருள்தாசன், பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் நாராயணன், கவுன்சிலர்கள் சொக்கலிங்கம், தமிழரசன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மாலையில், காப்பு கட்டுதல் நிகழ்வுடன் 10 நாள் திருவிழா துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, 58ம் ஆண்டு, தீ மிதி திருவிழா, 12ம் தேதி நடைபெற உள்ளது.