/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடியை ஜாமினில் எடுத்த கூட்டாளிக்கு சிறை
/
ரவுடியை ஜாமினில் எடுத்த கூட்டாளிக்கு சிறை
ADDED : ஜூலை 10, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழவந்தாங்கல்,
ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராபீன், 30; பிரபல ரவுடியான இவர் மீது, கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என, 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த மார்ச் மாதம், ஆதம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர், கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டாவது, தன்னை வெளியே எடுக்கும்படி, கூட்டாளிகளிடம் தெரிவித்தார். இத்தகவலறிந்த ஆதம்பாக்கம் போலீசார், ஜாமின் பெற்று கோவை சிறையில் இருந்து வெளியே வந்த ராபீனை மீண்டும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ராபின் ஜாமினில் வெளிவர உதவிய, அவரது கூட்டாளி விமல்ராஜ், 23, என்பவரை, பழவந்தாங்கலில் ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.